2007 இல் ரூபவாஹினிக்குள் அத்துமீறியமை - CID க்கு அழைக்கப்பட்டார் மேர்வின்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு, தனது கும்பலுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபணத்துக்குள் அத்து மீறியமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யில் ஆஜராக அழைப்பு விடுக்கப்ப்ட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி புதனன்று கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடிக்கு முற்பகல் 10.00 மணிக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி. இந்த அறிவித்தலை அவருக்கு அனுப்பியுள்ளது. நாரஹேன்பிட்டி பொலிஸார் ஊடாக இந்த அறிவித்தல் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்ப்ட்டுள்ளது.
(எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment