இலங்கையர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் - UAE அறிவிப்பு
2 இலங்கையர்கள் உட்பட 15 பேர் கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இத்தாலியர்கள் மூவர், ஐக்கிய அரபு இராச்சியம், பிரிட்டன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர், ஜேர்மனி, தென்னாபிரிக்கா, தன்சானியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒருவர் என 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.
மேலும் நோய் பரம்பல் தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்கள் கண்டறியப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment