ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்கள்
கொழும்பு, கம்பஹா,புத்தளம், கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது.
அநேகமான பிரதேசத்தில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து நகரங்களில் நடந்து கொண்டமை காணக் கூடியதாய் இருந்தது.
எவ்வாறாயினும் சில பிரதேசங்களில் பொது மக்களின் நடவடிக்கைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு எதிராக இருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களில் திரண்டு இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட போதும் பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய பிரதேசங்களில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டிருந்தார்.
பண்டாரவளை நகரில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் குறித்த பிரதேசங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment