Header Ads



பேருவளையில் விருந்துபசாரம் நடத்திய 18 பேர் கைது


பேருவளை, மத்தள சந்தியின் பன்சல வீதியில் அமைந்துள்ள ஹேட்டலொன்றில் விருந்துபசார நிகழ்வினை முன்னெடுத்த குற்றச்சாட்டுக்காக 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 18 பேரில் இரு பெண்களும் உள்ளடங்குவர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெகுஜன கூட்டங்களை தவிர்க்குமாறு அரசாங்கம் உத்தர விட்டுள்ளது. இந் நிலையிலேயே அந்த உத்தரவை மீறி செயற்பட்டமைக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மீது மதுபானம், ஐஸ் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபர்களை இன்றைய தினம் களுத்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. விடுதலையும் அடைந்தும் விட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.