இதுவரை 1875 பேர் கொரோனா தடுப்பு முகாமுக்கு அனுப்பிவைப்பு - விமான நிலையத்தை வைரஸிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோன வைரஸ் (கொவிட் 19) இலங்கையினுள் பரவுவதை தடுக்கும் பொருட்டு இதுவரையில் 1875 விமான பயணிகள் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையினுள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள 14 நாடுகளில் இருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் இன்று வரையில் வருகை தந்தவர்களே இவ்வாறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவில் பயணிகள் பயன்படுத்தும் பகுதிகளில் வைரஸ்களை அழிக்கும் முகமாக எல்கஹோல் தெளிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment