Header Ads



13 வயது சிறுமிக்கும் கொரோனா தொற்று - எண்ணிக்கை 21 ஆக உயர்வு


நாட்டில் மேலும் மூவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பு, அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

13 வயதுடைய சிறுமி, 50 மற்றும் 37 வயதுடைய ஆண்கள் இருவரும் இவ்வாறு அடையாளர் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்றைய தினம் வரை 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.