Header Ads



கொரோனாவினால் 11,397 மரணங்கள், இத்தாலியில் 4032 பேர் பலி, 88,210 பேர் குணமடைவு


ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,139ஆக உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் இரானும், ஸ்பெயினும் உள்ளன. இரானில் 1,433 பேரும், ஸ்பெயினில் 1,093 பேரும் பலியாகி உள்ளனர்.

சர்வதேச அளவில் நிலைமை இவ்வாறாக இருக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 88,210 பேர் குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

No comments

Powered by Blogger.