Header Ads



பொது விடுமுறைய மேலும் 1 வாரத்திற்கு நீடிக்க, மருத்துவ அதிகாரிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை


அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பொதுவிடுமுறைய மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்றைய -16- தினத்தை அரச பொதுவிடுமுறை தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு ஒருவார காலத்திற்கு அரச பொதுவிடுமுறை வழங்குவதன் மூலம் பொதுமக்களின் வெளி நடமாட்டத்தைக் குறைப்பதன் மூலம் கொரோனா தொற்று பரவக்கூடிய சூழ்நிலை வெகுவாக குறையலாம்.

அதேவேளை நாட்டின் அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களையும் இரண்டு வாரங்களுக்கு மூடவேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இந்த மாதம் நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளையும் மறுஅறிவித்தல் வரை பிற்போடுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

1 comment:

  1. A very good decision by GMOA and the government have to consider it for the common good!

    ReplyDelete

Powered by Blogger.