SLFP, JVP கூட்டணியில் இணைந்தால், வேறு சின்னத்தை பயன்படுத்தலாம்: ரணில்
புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன இணைந்தால், யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவது சிக்கல் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்னர் தனக்கு நெருக்கமானவர்களிடம் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.
புதிய கூட்டணி, ராஜபக்ச எதிர்ப்பு விரிவான அரசியல் கூட்டணியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன இணைந்து உருவாக்கப்படுமாயின் கட்டாயம் வேறு சின்னத்தை பயன்படுத்த நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ள ரணில், அப்படியில்லை என்றால், யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவதில் அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த கூட்டணியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளே இருக்குமாயின் புதிய சின்னத்திற்கான தேவை என்ன எனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் இதயம் சின்னத்தை சம்பிக்க ரணவக்கவே பரிந்துரைத்துள்ளதுடன் இந்த சின்னம் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டுள்ளது.
இந்த சின்னத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனினும் இதனை தேர்தல் சின்னமாக பயன்படுத்தினால் சமூகத்தில் அவமதிப்புக்கு உள்ளாக நேரிடுமா என்பது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர்.
நல்லாத்தான்அரளை பேந்திட்டு...
ReplyDeleteசின்னத்தில் நெஞ்சம் இருப்பது சிறந்ததே ஆயினும் சிறுபான்மை இன எதிரி ஆன
ReplyDeleteசம்பிக்கவை சேர்த்திருப்பதுவே அவமதிப்பு!
ஒரு பாணைச் சோற்றுக்கு ஓரு சோறு பதம்!
சிங்கள நெஞ்சங்களை வைரஸ்கள் ஆக்கிய
'அல்ஜிஹாத் அல்காய்தா' ஆசிரியர் இவர்!
2013 இல் வெளிவந்த அந்த நூலுக்கு இதுவரை மறுப்பு எழுதி எதாவது நூல் வெளியிட்டு இருக்கீங்களா? அதன் மூலம் சம்பிக்கவைக்கும் சிங்கள மக்களுக்கும் உண்மையை தெளிவாக்க முயற்சி செய்ததுண்டா?
ReplyDelete– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
ReplyDeleteஇலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.
இந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த்துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.
“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”
இப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள்? புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள்? புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும்! சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? பிரச்சினை வந்திருக்காதா? குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா? நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.