Header Ads



தேசப்பற்றுள்ள இலங்கையர், அமெரிக்காவுக்கு செல்ல வேண்டாம் - மரிக்கார் Mp

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு விசா வழங்க அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கும் வரை, அமெரிக்காவுக்கு செல்ல விசாவை விண்ணப்பிக்க வேண்டாம் என தேசப்பற்றுள்ள சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று -17- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது இறையாண்மையுள்ள அரசான இலங்கையின் இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடை என கருத வேண்டும். இந்த தடையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் வரை நான் எந்த சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுக்கு செல்ல விசா கோரி விண்ணப்பிக்க மாட்டேன். சகல இலங்கையரும் இதனை செய்ய வேண்டும். குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரிடம் இந்த கோரிக்கையை விடுக்கின்றேன் என மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Biggest joke and stop using Western materials also you joker.
    You use each and every technologies from western and you want to ban USA.
    Joker

    ReplyDelete
  2. If any opportunity is offered to visit USA to these so called MPs, he will probably be the first person to get this opportunity to visit USA, in line with the Tamil proverb " உனக்கல்லடி ஊருக்குத்தான் உபதேசம்"

    ReplyDelete
  3. அமெரிக்க அரசோ அல்லது மக்களோ ஆசியர்கள் குறிப்பாக இலங்கையர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதை விரும்புவதில்லை. நீங்கள் எம் பி என்பதற்காக வெற்றிலைச் செப்பு வைத்து உங்களை அமெரிக்கர்கள் வரவேற்க காத்திருப்பதாக கனவு காண்கின்றீர்களா?

    ReplyDelete
  4. IF TOMORROW AMERICAN GOVERNMENT FREE VISA SYSTEM FOR SRILANAKN ON ARRIVAL THERE WILL NOT BE A SINGLE SINGALA VEERAYA MP LEFT IN PARLIAMENT ALL WILL BE AWAITING IN LINE AT KATUNAYAKA AIR PORT READY TO LEAVE TO USA WITH THEIR FAMILY MEMBERS.

    ReplyDelete

Powered by Blogger.