கல்முனை மாநகர சபையின், பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர்
- பாறுக் ஷிஹான் -
கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தெரிவு செய்யப்பட்டார்.
கல்முனை மாநகர சபையின் முதல்வர் எம்.எ.றக்கீப் தலைமையில் புதன்கிழமை (12 ) 10 மணியளவில் இடம்பெற்ற விசேட அமர்வின்போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.
குறித்த புதிய பிரதி மேயர் தெரிவில் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர் அமீர் வழிமொழிந்ததுடன் அதே கட்சியை சேர்ந்த ஏ.எம் றோசன் அக்தர் வழிமொழிந்த நிலையில் சபையில் சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதி முதல்வராக தெரிவானார்.
முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் (தமிழர் விடுதலை கூட்டணி ) கட்சி தலைவரினால் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதனை தொடர்ந்து எழுந்த வெற்றிடத்திற்கு புதிய பிரதி முதல்வராக ரஹ்மத் மன்சூர் தெரிவு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று(12) நடைபெற்ற மாநகரபையில் நடைபெற்ற இவ்விசேடகூட்டத்தில் மாநகர சபையின் 41 உறுப்பினர்களில் 15 பேரே சமுகமளித்திருந்ததுடன் சபை நடாத்த முதல்வருடன் சேர்த்து 15 பேர் இப்பிரதி முதல்வர் தேர்வில் சமூகமளித்திருந்தனர்.இப்பிரதி முதல்வர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என் . மணிவண்ணன் முன்னிலையில் நடைபெற்றதுடன் பிரதி முதல்வர் தெரிவிற்கு கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்களும், சுயேட்சை குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
His name is Rahmathullah (Beautiful name) why you people r calling Rahmath...Rahmath... Offff!!!
ReplyDelete