இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள், இந்துக்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள் - எர்டோகன் ஆத்திரம்
டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர்பலி எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதாக துருக்கி அதிபர் விமர்சித்துள்ளார்.
முஸ்லீம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும், சட்டதிருத்தத்திற்கு எதிராக டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் நீண்ட நாட்களாகவே போராட்டம் நடைபெற்று வருகிறது.
அமைதியான வழியில் நடந்து வந்த போராட்டமானது, ஞாயிற்றுக்கிழமையன்று பெரும் கலவரமாக மாறியது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கான சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அங்காராவில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்கள் இந்துக்களால் படுகொலை செய்யப்படுவதாக கூறினார்.
தனியார் கல்வி மையங்களில் படிக்கும் குழந்தைகளை "கொலை செய்வது போல் உலோகக் குச்சிகளைக் கொண்டு" கும்பல்கள் முஸ்லிம்களைத் தாக்குகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்த மக்கள் எப்படி உலக அமைதியை சாத்தியமாக்குவார்கள்? அது சாத்தியமற்றது என பேசிய அவர், அதிக மக்கள் தொகையை கொண்டிருப்பதால் 'இந்தியா பலமாக இருக்கிறோம்' என்று கூறுகிறது.
ஆனால் அது வலிமை அல்ல" என்று பேசினார்.
இந்தியா என்பது உலகிலிருக்கும் ஒரு இழிவான நாடு. அந்த நாடு உடைந்து துண்டு துண்டாகும் நாட்கள் தொலைவிலில்லை
ReplyDeleteTake necessary action
ReplyDelete