Header Ads



இனி கல்முனைக்கு ஆபத்து

 வை எல் எஸ் ஹமீட்

சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி  வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரிவிக்கும் மக்கள் ஒரு புறம். அரசியல் பாராட்டுக்கள்; என கலகலக்கிறது. இதனைவிடவும் விரிவாக கொண்டாடினாலும் தப்பில்லை; அடுத்த ஊருக்கு அது அநியாயமில்லாமல் இருந்தால்.

இனரீதியாக பிரிக்கப்படக்கூடாது; என நம்மவர்கள் தெரிவித்த கருத்தை பிரதமரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. எல்லை நிர்ணயக்குழு ஒன்றை அமைத்து ஏனைய மூன்று சபைகளையும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் பிரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கு எழுகின்ற முதலாவது கேள்வி; அவ்வாறு மூன்று மாதங்களில் அவற்றைப் பிரிக்க முடியுமானால் ஏன் அந்த மூன்று மாதங்கள் தாமதித்து நான்கு சபைகளையும் ஏககாலத்தில் பிரிக்கமுடியாமல் போனது?

சாய்ந்தமருதுக்கான வர்த்தமானி தற்போது வெளியானாலும் 2022ம் ஆண்டுதான் தேர்தல் நடக்கும். அப்போது நான்கு சபைகளும் உருவாகிவிடும். கல்முனை பாதிக்கப்படாது; என்று சாய்ந்தமருது பள்ளித்தலைவர் கூறியதாக ஒரு செய்தி வாசிக்கக்கிடைத்தது.

2022இல் தான் தேர்தல் நடைபெறும். பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பேசி ஒரே சமயத்தில் தீருங்கள்; என்றபோது இல்லை; எங்களுக்கு இப்போதே வேண்டுமென்றவர்கள், இப்பொழுது எமக்கு சபை கிடைத்தாலும் 2022இல் தான் நடைமுறைக்குவரும். உங்களுடைய பிரச்சினையும் தீர்ந்துவிடும்; என ஆறுதல் கூறுகிறார்கள்.

ஆபத்து
————
இனரீதியாக பிரிப்பதில்லை என்றால் எதற்காக எல்லை நிர்ணயக்குழு? 1987 இல் இருந்த நான்கு சபைகளையும் ஒரே நேரத்தில் ஏன் பிரிக்கமுடியாது.

கல்முனையில் இருக்கின்ற எல்லைப் பிரச்சினை என்ன?

கல்முனையை தமிழர்கள் நிர்வாகரீதியாக துண்டாடச் சொல்கிறார்கள். எந்த இடத்தால் துண்டாடுவது? எனத்தீர்மானிப்பதற்கே எல்லை நிர்ணயக்குழு நியமிக்கப்படுகிறது.

கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினரும் இவ்வளவு காலமும் சாய்ந்தமருதுக்கு தனியாக சபை வழங்குவதை எதிர்த்து அண்மையில் பிரதமருடன் நடந்த கூட்டத்தில் அதை வழங்குவதற்கும் ஏனைய மூன்று சபைகளையும் எல்லை நிர்ணயக்குழு அமைத்து பிரிப்பதற்கும் உடன்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன்பொருள் கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனையைத் துண்டாட உடன்பட்டிருக்கின்றார்; என்பதாகும். எந்த இடத்தால் துண்டாடுவது என்பது மாத்திரம்தான் கேள்வியாகும்.

அதாவுல்லாவின் நான்காகப் பிரிப்பு
———————————————
சகோ அதாவுல்லா, தான் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தபோது கல்முனையை நான்காகப் பிரிக்க முற்பட்டதாகவும் அதனை கல்முனைப் பள்ளிவாசல் எதிர்த்ததன் காராணமாக கைவிடப்பட்டதாகவும் ஒரு கூற்று இருக்கின்றது.

அன்று கல்முனைப் பள்ளிவாசல் அதனை எதிர்த்ததற்கான காரணம் அதாவுல்லா, வாடிவீட்டு வீதியால் கல்முனையை பிரிக்க எத்தனிக்கின்றார்; என்பதாகும். இன்றும் அதாவுல்லா அதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாக அவருடன் இது தொடர்பாக பேசியவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இங்கு நாம் எழுப்பவேண்டிய கேள்வி, இனரீதியாக பிரிப்பதில்லை; என்பது அரசின் நிலைப்பாடு என்றால் கல்முனையை இனரீதியாக துண்டாடுவதற்கு எதற்கு எல்லை நிர்ணயக்குழு?
இலங்கையில் எந்தவொரு நகரமாவது இதுவரை இரண்டாகத் துண்டாடப்பட்டு இரு சமூகங்களுக்கு நிர்வாகரீதியாக பிரித்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றதா? கல்முனைக்குமட்டும் ஏன் இந்த தலைவிதி?

சாய்ந்தமருதிற்கு 1987 இற்கு முன்பிருந்த தனது கிராமசபையைக் கேட்பதற்கு உரிமையிருந்தால் அதை அரசியல்வாதிகளும் மற்றோரும் நியாயமாக காணும்போது கல்முனை தனது பட்டினசபையைக் கேட்பதில் என்ன தவறு? கல்முனையை மட்டும் எதற்காகத் துண்டாடவேண்டும்?

எல்லை நிர்ணயக்குழு தீர்வுகாணுமா?
————————————————
தமிழர்கள் கடற்கரைப்பள்ளி வீதியால் - அதாவது மொத்த வர்த்தக நகரத்தையும்- துண்டாடக்கேட்கிறார்கள். அதாவுல்லா வாடிவீட்டு வீதியால்- அதாவது பாதி நகரத்தை- கல்முனையில் அமைந்துள்ள அனைத்து பிரதான அரச அலுவலகங்களையும் உள்ளடக்கிய பிரதேசத்தை தமிழருக்கு தாரைவார்த்து கல்முனைக்கும் தனியான சபை வழங்கியதாக பெயர் எடுக்கலாம்; என நினைக்கிறார்.

கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினருக்கோ தனது பிரச்சினையை எந்தவொரு சபையிலும் முன்வைத்து தெளிவுபடுத்த முடியாதநிலை: கடந்த நல்லாட்சி அரசில் தமிழர்களின் பக்கமே நியாயமிருக்கிறது பிரதேச செயலக விடயத்தில்- என்ற அபிப்பிராயமே இருந்தது. முஸ்லிம் தரப்பு நியாயம் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.

எல்லைப் பிரச்சினை இருக்கிறது. எல்லை நிர்ணயக்குழு போடுங்கள். இவ்வளவுதான் சொல்லத் தெரிந்தது. எதற்காக எல்லை நிர்ணயக்குழு?

கல்முனையில் சபை இருக்கிறது. செயலகம் இருக்கிறது. இலங்கையில் எங்கும் ஒரு நகரம் இனரீதியாக துண்டாடப்பட்டு இரு சமூகங்களுக்கு கொடுக்கப்பட்ட வரலாறு இல்லை. எனவே, கல்முனையைத் தனியாக விட்டுவிட்டு சபை மற்றும் செயலகம் இல்லாத ஊர்களுக்கு கொடுங்கள்; என்று பேச, அதற்குரிய நியாயங்களை முன்வைக்கத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் சாயந்தமருது வர்த்தமானி தாமதிக்கப்பட்டதே தவிர, வேறு தடை இருக்கவில்லை. இப்பொழுது நடந்திருப்பதென்ன?

கல்முனைக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. அது கல்முனையின் பிரச்சினை. எங்களுக்கு உடனடியாக சபை வேண்டும். என்பது சாய்ந்தமருதின் நிலைப்பாடு. ஏதோ பெரிய ஆபத்தில் சாய்ந்தமருது இருப்பதுபோலவும் இந்த சபை கிடைத்தால் அது நீங்கிவிடும்போலவும் அவர்களது அவசரம் இருக்கிறது. சற்றுப் பொறுத்து கல்முனையையும் பாதுகாத்துக்கொண்டு அந்த சபையை ஏக காலத்தில் பெற்றிருக்கமுடியாதா?

அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. ஏதோ சாய்ந்தமருது ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் போலவும் கல்முனை இன்னுமொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போலவும் கோசமெழுப்பினார்கள்.

அன்று பண்டாரநாயக எவ்வாறு வாக்குகளுக்காக இந்நாட்டில் இனவாதத்தை விதைத்து இந்நாட்டின் சீரழிவுக்கு காரணமாக அமைந்தாரோ அதேபோன்று தனது தேர்தல் வாக்குகளுக்காக அதாவுல்லா கல்முனையை ஆபத்திற்குள் தள்ளி சாதனை செய்திருக்கின்றார். அதனை அறிவாளிகள் வாழ்த்துகிறார்கள் .

நடக்கப்போவதென்ன? தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எல்லை விடயத்தில் உடன்பாடு எட்டப்போவதில்லை. தீர்வு-ஒன்றில் கல்முனையில் பாதியை இழந்து தீர்வுகாணவேண்டும். அல்லது தீர்வே இல்லாமல் 2022ம் ஆண்டு தேர்தலுக்கு செல்லவேண்டும்.

அடுத்த தேர்தல் பெரும்பாலும் பழைய முறையிலேயே நடக்க வாய்ப்பு அதிகம். இந்தத் தேர்தல் முறையை எந்தக் கட்சியும் விரும்பவில்லை. அவ்வாறு நடந்தால் நம்மவர்கள் முப்பது கட்சிகளாகப் பிரிவார்கள்.

குறிப்பாக, அருகே இருக்கின்ற, திருமணங்களால் பின்னிப்பிணைந்த சாய்ந்தமருதுக்கே கல்முனைக்கு எது நடந்தாலும் கவலையில்லை; எனும் மனோநிலை இருக்கும்போது மருதமுனை, நற்பிட்டிமுனை கல்முனையைப் பாதுகாக்கும் கோணத்தில் வாக்களிப்பார்கள்; என எதிர்பார்க்கலாமா? அது நியாயமா?

அதேநேரம் தமிழர்கள் அவ்வாறான சூழ்நிலையில் கண்டிப்பாக ஒன்றிணைவார்கள். ஒரு வாக்கு அதிகமாக பெறும் கட்சி ஆட்சிக்குவரும். அந்நிலையில் தமிழர் ஒருவர் மேயரானால் அத்துடன் முடிந்தது கல்முனையின் அத்தியாயம்.

மார்க்கட்டில் வாடகை கட்டாமல் பாக்கி இருப்பவர்களை வெளியே போட்டுவிட்டு அவற்றைத் தமிழர்களுக்கு வழங்கலாம். கடையாக இல்லாமல் pavement வியாபாரம் செய்பவர்களை எழுப்பிவிட்டு அவற்றை பின்னர் தமிழர்களுக்கு வழங்கலாம்.

ஒரு வருடம்கூடத் தேவைப்படாது கல்முனை மார்க்கட்டில் பாதியை இழப்பதற்கு. அதேபோன்று அந்தக்காலத்தில் அனுமதி பெற்று யாரும் கடைகள் கட்டும் நடைமுறை பெரிதாக இருக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் விரும்பிய கடைகளை உடைத்தெறியலாம்.

இவ்வாறான ஆபத்தான நிலைமைக்கு கல்முனையைத் தள்ளிவிட்டு விழாக்காணுகின்றார்கள்.

அதேநேரம் கல்முனை தூங்கிக்கொண்டிருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினரின் அனுமதியில்லாமல் பள்ளித்தலைவர் ஒரு கூட்டத்தைக்கூட கூட்டமாட்டார்; என்கிறார்கள்.  அதை உண்மையாக்கியதுபோன்று இம்முறை எந்தக்கூட்டமும் கூட்டப்படவில்லை.

கவலையாக இருக்கிறது.

எலிக்கு மரணம்; பூனைக்கு விளையாட்டு; என்பார்கள். அதுபோல் பூனை விழாவும் பாராட்டும் கொண்டாட்டமுமாக இருக்கிறது. எலி  தனது ஆபத்துக்கூட புரியாமல் உலாத்துகிறது.

கவலைப்படுவதையும் பிரார்த்திப்பதையும் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

14 comments:

  1. சரியான ஆக்கம்.இனி முஸ்லிம்களின் ஒற்றுமை ஒரு கேள்விக்குறியாக மாறும் தொடக்க புள்ளியாகத்தான் சாய்ந்தமருதுக்கான இந்த தீர்வை பார்க்க வேண்டி உள்ளது.அதே நேரம் எம்மவர்கல் பொறுமையுடன் ஒற்றுமையுடனும்,நீதானத்துடனும் இனி வரும் காலங்களில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

    ReplyDelete
  2. Why don’t you file a case in the court of law?

    ReplyDelete
  3. முஸ்லிம்களின் தலைநகரத்தை சிதைத்த துரோகம் சாய்ந்தமருது பிரதேசவாத சக்திகளையே சாரும். வரலாற்றின் கரை நீங்கள்

    ReplyDelete
  4. dividing war is a big disaster, What a shame on our Kalmunai and Sainthamarudu, Saintha marudum kalmunaium oru 6km thaan irukkum athila pirivinai what a shame

    ReplyDelete
  5. பிரதமர் மகிந்த ராஜபக்ச கல்முனையை மூன்று பிரதேச சபைகளாக பிரிக்கும் முடிவை தெரிவித்துள்ளார். அரசாங்க கட்ச்சிப் பிரமுகர் திரு அதாவுல்லா அவர்கள் நான்குசபைகளாக பிரிக்கும் முடிவை அறிவித்துள்ளார்.யார் சரியாக இருந்தாலும் கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது முஸ்லிம்களும் தமிழர்களும் எல்லைகள்பற்றி இருந்துபோசும் அவசியத்தை உணருவது அவசியம்

    ReplyDelete
  6. Antha naathaarigal ethu vendumaanaalum seithuvittu pohattum.... Nayavanjahargaluk Man aasai pidittuvittatu...ekkedu kettavathu pohattum...

    Naam iniyum vilikkaamal...thongikondiruppomanaal... namathu uyirayum parikka tayanga maattanugal... antha eaanappiravigal....... Vilippomaaa?

    ReplyDelete
  7. கல்முனைக்கு ஒரு ஆபத்துமிலை. திரு மகிந்த ராஜபக்ச சொன்னதுபோல மூன்றாக பிரிந்தாலும் அல்லது திரு அதாவுல்லா அறிவித்ததுபோல நான்காக பிரிந்தாலும் கல்முனை இலங்கையில்தான் இருக்கும். நாம் ஒற்றுமையாக இருந்து முன்னேற முன்வராவிட்டால் ஆபத்து நமக்குத்தான் ஆபத்து, கல்முனைக்கல்ல.

    ReplyDelete
  8. http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_556.html

    ReplyDelete
  9. Sainthamaruthaarrr.....! They will pay the price....
    When we will wakeup...????

    ReplyDelete
  10. கல்முனை வடக்கு பிரதேச சபையைத் தரமுயர்த்துதல் என்ற
    முனைப்பில் தங்கியுள்ள பிரதான விடயம் என்னவென்றால் ;
    அவ்வாறு தர உயர்வுப் படுத்தல் என்பதில் காணி ,நிதி நிருவாகம்
    தமிழ் பிரதேச சபைக்கு கிடைத்து விடும் ; அப்படிக் கிடைத்தால்,
    தமிழர் கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட காணிகள் முழுமை
    யாகவே தமிழர்கள், வசமாகிவிடும், அப்பகுதிகளுக்குள் காணிகளை
    வாங்கவோ , அத்துமீறவோ , குடிபெயரவோ இயலாமல் போகும் ;
    சைவக் கோயிலொன்றை இடிக்கச் சொல்லிக் கேட்டு வழக்காடும்
    சூழ்நிலை இனி ஏற்படாது போகலாம் , என்ற வாறுகளான முஸ்லீம்
    சமூகஞ்சார்ந்த குறுகிய சிந்தனைகள் தான் ஹாரிஸ் போன்ற அரசி
    யல்வாதிகளின் எதிர்ப்பிற்கு காரணமாகும் !
    ▪️அத்தோடு , சாய்ந்தமருது பிரதேச சபை பிரிந்து போவதையும் ,
    இந்த. ஹாரிஸ் எதிர்க்கின்றார் ; அது, ஏனென்றால் சாய்ந்தமருது
    பிரிந்து தனிப்பிரதேச செயலகமாக தர உயர்வு பெற்றால் -அதாவது
    முஸ்லிம்களின் பெரும்பான்மையை அது இழக்கச் செய்யும் இதன்
    வாயிலாக தமிழர்களின் ஆதிக்கம் கூடலாம் , என்று பயம் கொள்கின்றா
    ர்கள்!
    என்ன இருக்கும் விதமாகவே இருந்து விட்டால் தங்களின் ஆளுகைக்குள்
    தமிழர்களை வைத்திருக்கலாம் என்ற அவர்களின் ஆதிக்க உணர்வாகும் !
    அரட்டை உரையாடல் முடிந்தது
    செய்தியை உள்ளிடவும்,
    இனவாதம் இனத்துரோகம் மட்டும் தமிழ்ழர்களிடம் இருந்தால் இன்று முஸ்லிம்களின் இருப்பு என்பது எப்போதோ கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கும்.
    இதற்கு காரணம் முஸ்லிம்கள் போல் தமிழ்ழர்கள் குறுகிய நோக்கம் கொண்டவர்கள் அல்ல.
    அதனால்தான் இன்று தமிழ்ழர்கள் நிறையவே அனுபவித்துக் கொண்டுருக்கிரார்கள்.

    ReplyDelete
  11. @பகுத்தறிவாளனே, தமிழ் பயங்கரவாதிகள் என்போர் யார் நீங்கள் எதற்கு பிரதேச செயலக உயர்வை கேட்கின்றீர்கள் என்று சிறு பிள்ளைக்கும் தெரியும். உங்களுக்கு தமிழ் பிரதேசங்களை பாதுகாத்துக்கொள்ள பிரதேச செயலகம் தேவையென்றால் எல்லையை சரியாக பிரித்து தாராளமாக சென்று தொலையுங்கள். எதற்கு முஸ்லிம்களின் நகரத்தை வளைத்துப்போட பார்க்கின்றீர்கள்? ஒரு சட்டவிரோத கழிவறையை ஆயுத முனையில் பெற்று அந்த கருமத்தை தரமுயர்த்த முஸ்லிம்களின் நகரத்தை தங்க தட்டில் வைத்து உங்களுக்கு தாரைவார்க்க வேண்டுமா?

    ReplyDelete
  12. இவர் யார் முட்டாள் ஒருவன் பகுத்தறிவாளன் என்ற பெயரில் எழுதியுள்ளான்?

    ReplyDelete

Powered by Blogger.