Header Ads



கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக கரு

ஐ.தே. க. தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது, கட்சியின் செயற்குழுவை அவரசமாகக் கூட்டி திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வைபவத்துக்கு ஒத்துழைப்பைப்பெற்றுக் கொடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரிய கம்பஹா மாவட்டத்தின் தலைமை வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே கொழும்பில் களமிறங்கத்தீர்மானித்திருக்க போதிலும் தற்போதைய நிலையில் அடுத்த இரண்டொரு தினங்களில் தமது நிலைப்பாட்டை வெளியிடுவார் எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.