குழந்தையை தூக்கிகொண்டு எங்கு செல்வது
அந்த கால்கள்
#நாசமாகட்டும்...
கிழக்கு டெல்லியில் கார்வார் பகுதியில் உள்ளது அந்த வீடு...
கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட தினத்தில் ஷபான பர்வீனின் வீடும் இந்துத்துவ பயங்கரவாதிகளால் சூறையாடப்பட்டு தீவைக்கப்படுகிறது...
நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை காப்பாற்ற முயன்ற ஷபானா பர்வீனின் கணவர் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் வெறி அடங்காத ஒரு அரக்கன் ஷபானா பர்வீனின் வயிற்றில் ஓங்கி மிதித்து விட்டு வெளியேறினான்...
கடுமையான வலியில் துடிதுடித்து போராடிய ஷபானாவை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு செல்ல இறைவன் அருளால் அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது....
வீடு முற்றிலும் தீக்கிரையான நிலையில் ஷபானாவின் தற்போதைய கவலை தனது குழந்தையை தூக்கிகொண்டு எங்கு செல்வது என்பதே....
Post a Comment