ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில், முஸ்லிம்கள் எவருமில்லை - விமலுக்கும், கம்மன்பிலவுக்கும் பதவிகள்
ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார்.
இதற்கமைய ஶ்ரீலங்கா கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் செயலாளராக பசில் ராஜபக்சவும் பிரதித் தவிசாளராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் பிரதி செயலாளராக அமைச்சர் மஹிந்த அமரவீரவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்களாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரும் கூட்டமைப்பின் உப செயலாளராக உதய கம்மன்பிலவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உப தவிசாளர்களாக திஸ்ஸ வித்தாரண, அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார மற்றும் டியூ குணசேகர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
பொதுஜன ஐக்கிய முன்னணி, ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பாக மாற்றம் பெறவேண்டும் என சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment