வடை, தோசை, இட்லியின் விலையில் அதிகரிப்பு
நாட்டிலுள்ள உணவகங்களில் உளுந்து வடை, தோசை மற்றும் இட்லியின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டில் வளர்க்க கூடிய தானியங்கள் இறக்குமதி செய்வதனை நிறுத்தும் திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சந்தையில் மஞ்சள் மற்றும் உளுந்து இறக்குமதி செய்யப்படுகின்றமையினால் அவற்றின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
நாட்டில் போதுமான உற்பத்தி மேற்கொள்ளாமையினால் தானியங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஒரு கிலோ உளுந்தின் விலை 700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அது மாத்திரம் மஞ்சள் ஒரு கிலோ கிராம் 650 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் தோசை, இட்லி மற்றும் உளுந்து வடையின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலைமைக்கமைய மஞ்சள் மற்றும் உளுந்திற்கான இறக்குமதி அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment