Header Ads



அமெரிக்காவுக்கு இலங்கை பதிலடி

அமெரிக்கா இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக விதித்துள்ள பயண தடைகளிற்கு கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த தடை சுயாதீனமான ஆராயப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தில் அவரது சிரேஸ்ட நிலையை கருத்தில்கொண்டே சவேந்திரசில்வா இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டார் அவரிற்கு எதிராக நிருபிக்கப்பட்ட  வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தில் உள்ளவர்களில் சிரேஸ்டநிலையில் உள்ளதாலேயே சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவபிரதானி பதவியை வழங்கினார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளமை கரிசனை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது  என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளிற்கு நிருபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது  ஏமாற்றமளிக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவேந்திரசில்வா குறித்த தகவல்களின் நம்பகதன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


8 comments:

  1. 2009ல் போர் வெற்றி அமரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் உதவிகளால் மட்டுமே கிடைத்த வெற்றியல்லவா? இனி அவர்கள் வட்டியும் முதலுமாகக் கேட்ப்பார்கள், அது இயல்புதானே.

    ReplyDelete
  2. இதில் என்ன பதிலடி இருக்கறது?
    இவனுக்கு மட்டுமல்ல கோட்டாவுக்கும் இதே தடை விதிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. தத்துவார்த்த முறை, சிரேஸ்டத்துவம், திறன், அனுபவம் என்ற அடிப்படையில் இலங்கை அரசின் நியமனம் மிகச் சரியானதே. குறிப்பாக பாசிச கோரப் புலிகளை அழித்தொழிப்பதில் இவரது பங்களிப்பும் புறக்கணிக்கக் கூடியதல்ல.

    ReplyDelete
  4. Sinhalese can't appoint their own people for a higher position as America plays the wild card drama but they keep quiet when terrorist Karuna Amman is appointed as a minister.

    ReplyDelete
  5. தமிழ் புலி பயங்கரவாதத்தை ஒழித்த தேசிய வீரன் சவேந்திர சில்வாவை நோக்கி கை நீட்ட அமெரிக்க நாய்களுக்கு எந்த தகுதியும் இல்லை

    ReplyDelete
  6. @NGK and Ladies, இப்படி வயிற்றெரிச்சலில் புளம்புவதை தவிர பாவம் உங்களால் என்ன செய்ய முடியும்?

    அமெரிக்கவுடன் வாளாட்டினால் உங்களை ஊறுகாய் போட்டுவிடுவார்கள்.

    அது தவிர நீங்கள் எப்படி தான் அரசாங்கத்திற்கு ஆதரவை காட்டிணாலும்ஃ, உங்கள் பொய் நாடகங்களை சிங்கள மக்கள் நம்பபோவதில்லை. வழமைபோல் ஆடிவிழும்

    ReplyDelete

Powered by Blogger.