யானை சின்னத்தை தவிர வேறு, எதிலும் நான் போட்டியிட மாட்டேன் - நவீன்
ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் அல்லாமல் வேறு எந்த சின்னத்திலும் போட்டியிட தாம் தயாராக இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது ,
யானை சின்னத்தில் வரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதே கட்சியில் உள்ள அனைவரினதும் விருப்பம். தேவையானால் கட்சிக்குள் வாக்கெடுப்பை நடத்தலாம்.
அதைவிடுத்து இதய சின்னத்திலோ அல்லது வேறு எந்த சின்னத்திலோ போட்டியிட்டால் கடந்த தேர்தலை விட படுதோல்வியை சந்தித்து இருப்பதையும் இல்லாமலாக்கிக் கொள்ள வேண்டி வரலாம்.என்னைப் பொறுத்தவரை யானை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் நான் போட்டியிட மாட்டேன் என்றார் நவீன். sivaraja
யானையோடு நீங்கள் அவ்வளவு பாசமோ?நீங்கள் உங்கள் மாமா எல்லோரும் கட்சியை தூக்கி எறிந்து மஹிந்தவுடன் சென்றவர்கள் தானே?இப்போ கட்சிப் பாசம்.மஹிந்தவை வெல்ல வைப்பதே உங்களதும் ரனிலினதும் நோக்கம்.52 நாள் ஆட்சிதில் பிரதமர் பதவியை எடுக்கச் சொல்லி கட்சிக்காக எடுக்காமல் கொள்கையோடு இருந்தவர் ஸஜித்.நீங்கள் என்றால் அப்பவே எடுத்திருப்பீர்கள்.கட்சிப் பாசம் இருப்பது எங்களுக்கு.நீங்கள் யானையில் கேட்டால் என்ன கேட்காவிட்டால் தான் என்ன?நீங்கள் காய் நகர்த்துவது க்ட்சித் தலைமையை நீங்கால் அபகரிப்பதற்கே.நாங்கள் விடுவோமா?
ReplyDelete