Header Ads



வடக்கின் பெருஞ்சமரும், யாழ் முஸ்லிம் கிரிக்கெட் வீரர்களும்


- பரீட் இக்பால் -
                         
யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட்டில் வடக்கின் பெருஞ்சமர் அணிகளானது யாழ் மத்திய கல்லூரியும் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியும் ஆகும் என்பது யாவரும் அறிந்த விடயம். எதிர்வரும் மார்ச் மாதம் 05, 06,07 ஆகிய தினங்களில் வடக்கின் பெருஞ்சமர் நடக்கவிருக்கிறது.

 வடக்கின் பெருஞ்சமரில் இரு அணிகளிலும்  யாழ் முஸ்லிம் கிரிக்கெட் வீரர்களும் விளையாடியுள்ளனர்.  அணிக்கு தலைமை தாங்கியும் உள்ளனர்.

யாழ் மத்திய கல்லூரி அணிக்காக எம்.எஸ். அபூபக்கர் (1969, 1970)

எம்.எஸ்.நஸீர் (1971, 1972, 1973)


எம்.எஸ், றமீஸ் (1974, 1975, 1976, 1977)

எம்.எஸ்.எம்.ஸாஜித் (1990)

எம்.பிஷ்ருல் ஹாபி (1990)

சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்காக எம்.வை.ஏ.பௌஷான் (1975, 1976, 1977, 1978) ஆகியோர்கள் விளையாடியுள்ளனர்.

யாழ் மத்திய கல்லூரி அணிக்காக விளையாடிய எம்.எஸ்.நஸீர் 1973 இல் அணிக்கு தலைவராக விளையாடியதும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு எம்.வை, ஏ, பௌஷான் 1978 இல் அணிக்கு தலைவராக விளையாடியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் யாழ் தெரிவுக் குழுவிலும் யாழ் மத்திய  கல்லூரி சார்பாக எம்.எஸ்.நஸீர், எம்.எஸ். றமீஸ் ஆகியோரும் சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பாக எம்.வை.ஏ, பெளஷான் உம் விளையாடியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

யாழ் மத்திய கல்லூரி அணிக்காக வடக்கின் பெருஞ்சமரில் விளையாடிய அபூபக்கர், நஸீர், றமீஸ் ஆகியோர் யாழ் மாநகர சபை முன்னாள் மேயரும் குவாஸியுமான மர்ஹூம் எம்.எம்.சுல்தான் அவர்களுடைய புதல்வராவார்கள்.


1 comment:

  1. Proud to be a Centralite. I was in Lower school when Rameez & Fowzan were playing. Remember the big match when Fowzan was ct behind by the wicket keeper, Rameez (who is also his maternal uncle!😃)

    Good old memories, thank you for the post

    ReplyDelete

Powered by Blogger.