"அரபுக் கல்லூரிகள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி"
"அரபுக் கல்லூரிகள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி ..." எனும் கருப்பொருளில் நத்வத்துர் ரஹ்மானிய்யீன் ஏற்பாடு செய்திருந்த ரஹ்மானிகளுக்கிடையிலான திறந்த கலந்துரையாடலின் இரண்டாம் சுற்று தெகிவளையில் ஸம்ஸம் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
காலை 09:30 முதல் இரவு 09:30 வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள அரபுக் கல்லூரிகளில் அதிபர்களாக, உதவி அதிபர்களாக மற்றும் ஆசிரியர்களாக கடமையாற்றும் ரஹ்மானிகள் கலந்துகொண்டனர்.
மாணவருக்கு கற்பிப்பதிலும், மாணவரை உருவாக்குவதிலும் ஆசிரியரின் பங்கு பணி பற்றியும் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறை பற்றியும் இரண்டாம் சுற்று கலந்துரையாடல் அமைந்திருந்தது.
நத்வத்துர் ரஹ்மானிய்யீனின் தலைவர் முப்தி எம்.எச்.எம். யூஸுப் (ரஹ்மானி) அவர்களின் தலைமையில், அதன் செயலாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி) அவர்களின் வழிகாட்டலில் இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
மாணவர்களுக்கு அறிவூட்டி, ஒழுக்கமூட்டி அவர்களை உயர்ந்த ஆலிம்களாக உருவாக்கிவிட உபாத்தியாயர்கள் செய்ய வேண்டிய கடமைகள், தமது பதவியில் அவர்கள் பேண வேண்டிய ஒழுங்கு முறை தொடர்பில் நீண்ட நேரமெடுத்து ஆழமாக, அகலமாக, விபரமாக நடைமுறை உதாரணங்களுடன் விளக்கி குறிப்புகள் அடங்கிய கைப்பிரதிகளையும் வழங்கியுதவினார் அஷ்-ஷைக் அப்துல் நாஸர் அவர்கள்.
நத்வத்துர் ரஹ்மானிய்யீன்,
ஊடகப் பிரிவு
Post a Comment