பயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது
சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிரதான ஹோட்டல்கள், பிரதான வைத்தியசாலைகளில் ஒரே நேரத்தில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதல் முறையாக கடந்த வாரம் தெரியவந்துள்ளது.
நோயாளர் காவு வண்டிகளில் வெடிப் பொருட்களை நிரப்பி, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி வைத்தியசாலைகளில் மிகப் பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள தற்கொலை தாக்குதலுக்கான பயிற்சிகளை பெற்றிருந்த அடிப்படைவாதிகள் தெரிவித்துள்ளதாக ஆணைக்குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் எம்.ஜே. மாரசிங்க உள்ளிட்ட குழுவினர் வண்ணாத்துவில்லுவில் வெடிப் பொருள் களஞ்சியம் ஒன்றை கண்டுபிடித்தனர். குறித்த இடத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி 80 அடிப்படைவாதிகளுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.
ஜனவரி 16 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களம் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பின் பின்னர் நடத்திய விசாரணைகளை அடுத்து, ரிதிதென்ன பிரதேசத்தில் சஹ்ரான் 25 லட்சம் ரூபாய் கொடுத்து கொள்வனவு செய்திருந்த மகாவலி காணியில் இருந்து 238 ஜெலக்னைட் கூருகளை கைப்பற்றினர்.
விசாரணைகளுக்கு அமைய சஹ்ரான் குழுவினரின் எதிர்கால தாக்குதல் திட்ட தகவல்கள் உட்பட சகல விடயங்களையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது போதிலும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்பதால், ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.
போங்கடா பொய்ப் பொத்தல்கள்
ReplyDeleteISIS ஆபத்து இலங்கையில் இன்னும் அதிகமாக உள்ளது.
ReplyDeleteஅதனால்தான் கோட்டாவும் மகிந்தவும் இஸ்ரேல் உதவியை நாடுகின்றனர்