Header Ads



அமெரிக்காவும், இந்தியாவும் ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளன

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பலவீனமான ஆட்சியாளர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேசப்பற்றுள்ள ஆட்சியாளர்களை உருவாக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியது. தேர்தல் மேடைகளில் கூறியதை அவர்கள் செய்யவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினர் அமெரிக்கா மற்றும் இந்திய விரோதத்தை கட்டியெழுப்பினர்.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை அமெரிக்காவும் இந்தியாவும் ஆட்சிக்கு கொண்டு வந்தது. ரணில் விக்ரமசிங்க சிறந்த அமெரிக்க முகவர்.

அமெரிக்கா ஒரு தரம் குதிக்குமாறு கூறினால், ரணில் விக்ரமசிங்க மூன்று முறை குதிப்பார். அவரது ஆட்சியில் அமெரிக்காவும் இந்தியாவும் பொருளாதார , அரசியல் மற்றும் போர் திட்டங்களை இலங்கைக்காக வகுத்தன. ரணில் விக்ரமசிங்கவின் பலவீனம் காரணமாக அவற்றை செய்ய முடியவில்லை.

எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நான்கு வருடங்களாக அதில் கையெழுத்திட முடியவில்லை. ரணில் வீட்டுக்கு செல்லும் வரை அதனை செய்ய முடியாமல் போனது.பலத்தை சமப்படுத்த மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க ரணில் இணங்கினார்.

மூன்று வருடங்கள் ஆகியும் அவரால் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க முடியவில்லை. இதற்கு காரணம் ரணிலுக்கு விருப்பம் இல்லை என்பதால், அவரது பலவீனமே இதற்கு காரணம்.

மகிந்த ராஜபக்ச விலை மனுக்களை கோராமலேயே சம்பூரில் நிலக்கரி மின் நிலையம் ஒன்றை நிர்மாணிக்க இந்தியாவின் என்.சீ.சீ நிறுவனத்திற்கு வழங்கினார். எனினும் 5 ஆண்டுகளாக ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் அதற்கான அடிக்கல்லை கூட நட முடியவில்லை.

ரணிலுக்கு பலவீனமானவர்களை பிடிக்கும். ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தளவுக்கு அமெரிக்க, இந்திய நிகழ்ச்சி நிரல்கள் இருந்தாலும் ரணிலின் பலவீனம் காரணமாக அவற்றை செய்ய முடியவில்லை. இதனால், அமெரிக்காவும் இந்தியாவும் தமது நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க ராஜபக்சவினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளன.

ரணிலை அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை என்பது இதற்கு காரணமல்ல. ரணிலுக்கு முடியாது என்பதே இதற்கு காரணம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.