நாடு என்ற ரீதியில் ஷவேந்திர சில்வாவிற்கு, ஒத்துழைப்பு நல்க வேண்டும், சஜித்
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைமை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்ற தளபதிகளில் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைரின் ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.
நாடு என்ற ரீதியில் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவரின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவை குரோணா வைரஸ் முடக்கிப் போட்டிருக்கும் தருணம் பார்த்து இலங்கை அரசை போர்குற்ற வைரஸ் தாக்க ஆரம்பித்திருக்கு. இந்த நெருக்கடியை சரியாக அணுகுவதானால் அரசியல் கைதிகள் விடுதலை மட்டுமே சரியான ஆரம்பமாக அமையும். அது பாதிக்கபட்ட மக்களுக்கும் உலகத்துக்கும் புதிய ஆரம்பம் பற்றிய நல்லெண்ண சமிக்ஞையாக அமையும். அதுசரி சஜித்தை பற்றி ஒரு வார்த்தை சஜித் நீங்க அரசியல் கொலைகளை இலங்கையில் அறிமுகப் படுத்திய அப்பனின் பிள்ளை என்பதை அடிக்கடி நினவு படுத்துகிறீங்க. பசுத்தோல்போர்த்த புலியான உங்களை நம்பியிருக்கிற சிறுபாண்மை இன தலைவர்கள் பாவம்.
ReplyDelete