எஸ்.பி. திஸாநாயக்க மன்னிப்பு கேட்டார். எனினும் ஏற்றுக்கொள்வதற்கு அங்கிருந்தோர் மறுப்பு
- டி.சந்துரு -
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்துக்கும், இராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, இ.தொ.காவின் அங்கத்தவர்கள், கடுமையான எதிர்ப்பை தெரிவித்தமையால், அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எவ்விதமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தின் போது, நானு ஒயாவில் கடந்த 20 வருடங்களாக வசிக்கும் குடும்பமொன்றுக்கு எதிராக, நுவரெலியா பிரதேச சபையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறவேண்டுமென முத்து சிவலிங்கம் கோரிநின்றார்.
அக்கோரிக்கையை ஏற்கமறுத்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க, அப்படியாயின், அந்த குடும்பத்தை வெளியேற்றவேண்டும் என பணித்தார்.
இதனால், கடுமையாக கோபமடைந்த இ.தொ.காவின் ஏனைய பிரதிநிதிகள், அக்குடும்பத்தை வெளியேற்றுவதாயின் அரசாங்க விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்களையும் உடனடியாக வெளியேற்றவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போதே இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், எவ்விதமான முடிவுகளும் இன்றி, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தன்னுடைய கூற்றுக்கு எஸ்.பி.திஸாநாயக்க மன்னிப்பு கேட்டார். எனினும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு அங்கிருந்தோர் மறுத்துவிட்டனர்.
Post a Comment