6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக, நெருப்புக்குள் புகுந்த இந்து சகோதரர்
இந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிறார்.
வடகிழக்கு டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது, இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடந்த வன்முறைக்கு நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர், ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, பா.ஜ.க குண்டர்களிடம் இருந்து இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்காக சீக்கியர்கள் குருத்வாராவை திறந்துவிட்டும், இந்துக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தும், வன்முறையாளர்கள் இஸ்லாமியர்களை தாக்கிவிடாத வண்ணம் சாலைகளை தலித் மக்கள் மறித்தும் உதவி செய்து வருகின்றனர்.
இதேபோல, தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு உதவி செய்து வரும் நிகழ்வு, எத்தனை மதவாத குண்டர்கள் வந்தாலும் நாட்டு மக்களிடையே இருக்கும் மனிதம் மரிக்காது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் இந்துத்வா குண்டர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் - பள்ளிவாசல்களை குறிவைத்து பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ப்ரேம்காந்த் பாகெல் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவரின் வீட்டுக்கு அருகே உள்ள இஸ்லாமியர்களின் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது.
இதனை அறிந்த பாகெல், ஆபத்தில் சிக்கியுள்ள இஸ்லாமியர்களை காப்பாற்றுவதற்காக தன் உயிரைப் பணயம் வைத்து அந்த வீட்டிலிருந்த 6 பேரை மீட்டுள்ளார். இறுதியில் அங்கிருந்த மூதாட்டி தீயில் சிக்கியதை அறிந்து மேலும் உட்சென்று அவரையும் மீட்டுள்ளார். இந்த மீட்புப் பணியின்போது பாகெலுக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு பாகெலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது எந்த வாகனமும் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் 70 சதவிகித தீக்காயத்துடன் இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளார். மறுநாள் காலை பாகெலை டெல்லியில் உள்ள GTB மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு தீக்காயங்களுக்கு ஆளான பிறகும் தனது நண்பரது குடும்பத்தினரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியே போதும் என ப்ரேம்காந்த் பாகெல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தினரை, இந்து மதத்தைச் சேர்ந்தவர் தனது உயிரைத் துச்சமாக எண்ணிக் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ajan,pilla இரண்டுமே சரியான மக்கு மாடுகள். தனிதம் வாழ்வது உங்களுக்கு தற்போதாவது விளங்குமா? மனிதம் என்றாலே உள்ளமும் ஆறாவது அறிவும் கொண்டதாக இருக்கும். அது எங்கே உங்களிடம் இருந்து பாசிசப் புலிகள் பிடுங்கி எடுத்துவிட்டார்களே.
ReplyDelete”மானுடம் வென்றதம்மா” - கம்பர்
ReplyDelete