ரிஷாத்தின் மனைவியிடம் நேற்று 5 மணிநேரம் வாக்குமூலம், மீண்டும் இன்று CID வாக்குமூலம்
கொழும்பு இசிபதான மாவத்தையில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் குறித்து வாக்குமூலம் வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி இன்று -27- இரண்டாவது நாளாகக சிஐடியில் முன்னிலையாகியியுள்ளார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் (26) அவரிடம் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு இசிபதானவிலுள்ள வீட்டில் பல்வேறு காணி உறுதிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு சில காணி உறுதிப்பத்திரங்கள் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் பெயரில் இருந்தாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சிஐடியினர் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.
அதற்கமைய, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.
Post a Comment