Header Ads



உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது


டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பில் வெறுப்புப் பேச்சுகள் பேசியதாக யார் மீதும் வழக்குத் தொடரவேண்டாம் என்று கவனமாகவே முடிவெடுத்திருப்பதாக டெல்லி போலீஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால் அப்படி வழக்குத் தொடர்வது, அமைதியும், சகஜ நிலையும் மீள்வதற்கு உதவாது என்றும் அது தெரிவித்தது. அத்துடன் டெல்லி வன்முறைகள் தொடர்பாக 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தங்களுக்குத் தெரிந்து 3 பேருடைய வெறுப்புப் பேச்சுகளை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், நிறைய பேர் அப்படிப் பேசியிருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் அரசு தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா.


2 comments:

  1. THIS IS FAKE NEWS ALMOST 500 DEATH

    ReplyDelete
  2. மகிழ்ச்சி அடைகிறோம் நாம் இனியாவது திருந்துங்கள் டெல்லியில் நடந்தது டெய்லா் மட்டும் விரைவில் இந்தியா முழுவதும் இனி குடியுாிமை கேட்டு வருவீங்க கல்ல தோணிகல்

    ReplyDelete

Powered by Blogger.