Header Ads



மார்ச் 2 இல் தாமரை தடாகத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண நிகழ்வு

ஐக்கிய தேசிய கட்சியில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நேற்றிரவு விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்றிரவு 8 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி தாமரை தடாகத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பண நிகழ்வு குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிய வருகின்றது.

இதற்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் குறத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.