மொட்டு சின்னத்தின், தரகர் அல்ல றிஸ்வி முப்தி
றிஸ்வி முப்தி அன்று 2020-02-14 ம் திகதி நடாத்திய ஜும்ஆ உரை
1- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எப்போதும் இலங்கை நாட்டுக்கு யார் ஜனாதிபதியாக வந்தாலும் வாழ்த்துச் செய்தி கூறுவதும் அரசாங்கம் செய்யும் நலவுகளை பாராட்டுவதும் தேவையும் பொறுப்புமாகும்.
2- இஸ்லாத்தில் அரசியலுக்கு ஒரு பங்கு இருக்கிறது. எவ்வாறு வியாபாரம், தொழில், குடும்பத்துக்கு இஸ்லாத்தில் வெவ்வேறான ஒழுங்கு முறைகள் கூறப்பட்டுள்ளதோ அது போலவே இஸ்லாம்தான் அரசியல் என்றோ அல்லது அரசியல்தான் இஸ்லாம் என்றில்லாமல் அது பற்றி ஆராய்ந்து எமது அரசியல் பயணத்தை நகர்த்த வேண்டும்.
3- வாக்களிக்கும் உரிமை பெற்ற ஒவ்வொருவரும் (அது தனது மகளாகக் கூட இருக்கலாம்,) யாருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு, அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும்.
4- அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உலமாக்கள், துறைசார்ந்தவர்கள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்து உட்கார்ந்து பாரம்பரிய கட்சி அரசியல் கலாச்சாரத்தை மறந்து/துறந்து சமூகத்தின் தேவையையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நல்லொரு முறையை பின்பற்றுவதன் அவசியத்தை ஆலோசனை செய்து கொள்ள வேண்டும்.
5- அரசாங்கத்தை சில சந்தர்ப்பங்களில் மாற்றியமைப்பதும், சில சந்தர்ப்பங்களில் பாதுகாத்துக் கொள்வதும்,- சில சந்தர்ப்பங்களில் ஆட்சியை கேட்பவருக்கு வழங்குவதும், சில சந்தர்ப்பங்களில் ஆட்சியை கேட்பவருக்கு வழங்காமல் இருப்பதும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களை பேணி நடந்து கொண்டால் எமது முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கலாம், அதனூடாக எமது உரிமைகளை பாதுகாக்கலாம்.
இதுவே அவரது 2020-02-14 ஜும்ஆ உரையின் சுருக்கமாகும். தவிர கட்சி சாயம் பூசிக் கொண்டு மிம்பர் ஏறி செய்யப்பட்ட உரை அல்ல என்பதை எமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தவறாக வழி நடத்தப்படுவோர் அல்லது தவறான கண் கொண்டு பார்ப்பவர்கள் சிந்தித்து நடப்பார்களாக, தேவையற்ற விமர்சனங்களை தவிர்ந்து கொள்வார்களாக.
றிஸ்வி முப்தி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராகவோ அல்லது மொட்டு சின்னத்தின் தரகராகவோ ஏறிய மிம்பர் அல்ல என்பதையும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு உலமாக்களின் தூதை கொண்டு செல்லும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் நேரடி ஒலிப்பதிவுக்காக அவரது கடமையை உணர்த்திய கொல்லுபிடி மிம்பர் மேடை என்பதை எமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி
அஷ்-ஷேக் பெளசுல் அமீர்(முஅய்யிதி)
Post a Comment