200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா, ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்
200 மில்லியன் இஸ்லாமியர்களின் தாய்நா இந்தியா, உள்நாட்டு விவகாரமா? ட்ரம்பை விளாசிய ஜனாதிபதி வேட்பாளர்
டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து பேசாத டொனால்ட் ட்ரம்புக்கு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு கடந்த ஞாயிறன்று வந்திருந்தார். முதல் நாள் குஜராத்திற்குச் சென்ற அவர், மறுநாள் டெல்லி வந்திருந்தார். அப்போது மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் நினைவிடங்களுக்கு சென்று ட்ரம்ப்பும் மோடியும் மரியாதை செலுத்தினர். அதன்பிறகு இருவருக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கிடையே, டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் மதவாத தாக்குதலை நடத்தியது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. ஆனால், அந்த சமயத்தில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வன்முறை தொடர்பான கேள்விக்கு அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை எனக் கூறி விலகிவிட்டார். இது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து ஏன் பேசவில்லை என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் ட்ரம்புக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், 200 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் இந்தியாவை தாய்நாடாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பெரிதாகப் பரவி வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை பலரை பலிவாங்கியுள்ளது. ஆனால், அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப், “டெல்லியில் நடக்கும் வன்முறை தெரியும். ஆனால் அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” எனக் கூறியிருப்பது மனித உரிமை மீதான அவரது தலைமைப் பண்பின் தோல்வி என பெர்னி சாண்டரஸ் சாடியுள்ளார்.
மேலும், டெல்லி வன்முறைத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதுபோக, அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம், இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்திய அரசாங்கம் தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
யார் இந்த டிரம்ப்? அவனது குரங்கு மூஞ்சி அவனது உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறதே.
ReplyDelete