மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததில் 13 ரோஹிங்யர்கள் வபாத், 40 பேரைக் காணவில்லை.
வங்காள விரிகுடாக் கடலில் சென் மார்ட்டின் தீவுக்கருகில் கடந்த செவ்வாய்க்கிழமை படகு கவிழ்ந்ததில் குறைந்தது 13 ரோஹிங்யர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் முகாம்களில் வசிக்கும் ரோஹிங்ய சமூகத்தை சேர்ந்தவர்களென ஆரம்ப விசாரணைகளில் எமக்குத் தெரியவந்துள்ளதென உள்ளூர் நிருவாக உத்தியோகத்தர் மொஹமட் கமால் ஹுஸைன் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களது உடல்கள் அருகிலுள்ள கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எமது அணியினர் அங்கு நிற்கின்றனர், நாம் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
பங்களாதேஷ் கரையோரக் காவல் படையினரும் கடற்படையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கரையோரக் காவல் படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாம் 63 பேரை உயிருடன் மீட்டுள்ளோம், அவர்களுள் பெரும்பாலானவர்கள் ரோஹிங்யர்களாவர் எனவும் ஊடகப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதுவரை 40 பேரைக் காணவில்லையெனத் தனது பெயரை வெளியிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்தார். இதனிடையே, 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் பெரும்பாலானவர்கள் ரோஹிங்யர்களாவர் எனவும் கரையோரக் காவல் படையின் தளபதியை மேற்கோள்காட்டி உள்ளூர் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையான ஜமுனா ரீவி தெரிவித்துள்ளது.
காணாமல்போயுள்ளோரை தேடிவரும் நிலையில், இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ரோஹிங்ய அகதிகள் தற்போது கொக்ஸ் பஸாரில் அமைந்துள்ள அழுக்கு நிறைந்த தற்காலிக முகாம்களில் மனிதவாழ்வுக்கு பொருத்தமற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
ரோஹிங்ய மக்களை மியன்மாரின் ராக்கைன் மாநிலத்திலுள்ள அவர்களது சொந்த இடங்களுக்கு அமைதியாகத் திருப்பி அனுப்புவதற்கு கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
முகாம்களில் வாழ்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாக சட்டவிரோதமாக, ஆபத்தான கடல்வழிப் பயணத்தின் மூலம் மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு செல்ல முற்படுகின்றனர்.-Vidivelli
யா அல்லாஹ்
ReplyDeleteநிர்க்கதியாகி தவிக்கும் உனது அடியார்கள் யா றப்;
அன்பு உள்ளங்களே உங்களின் துஆக்களில் இந்த மக்களுக்காக மனமுருகி பிரார்த்தியுங்கள்.
Indonesia has enough land capacity, but...?
ReplyDelete