Header Ads



UNP தலைமைத்துவ நெருக்கடி - இன்றும், நாளையும் பல கலந்துரையாடல்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ நெருக்கடி தொடர்பில் இன்று மற்றும் நாளையும் பல கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கஇ சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தலைமைத்துவம் தொடர்பில் நாம் அனைவரும் கலந்துரையாடியுள்ளோம்.

எதிர்வரும் சனிக்கிழமை இறுதி தீர்மானம் எட்டப்படுமென நம்புகின்றோம்.

உயர் மட்ட ரீதியாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுத் தேர்தலுக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென் நோக்குடன் அந்த பிரச்சினை விரைவாக தீர்க்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவர்களின் கலந்துரையாடல் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் நடக்கும் அது தான் ரணிலுக்கு வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.