CCTV காட்சிகளைக் கொண்டு, 5 கோடி ரூபா தங்கம் பிடிபட்டது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வௌியேறும் நுழைவாயில் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 5 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் காலியைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Post a Comment