பாராளுமன்றத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை, ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுத் தேர்தலில் எவ்வித நிபந்தனையும் இன்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
தேர்தலின் போது அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு மாத்திரமின்றி நாட்டுக்கு மிகப் பொறுத்தமான தலைவராக அவர் இணங்காணப்பட்டுள்ளமையினாலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அத்தோடு பாராளுமன்றத்தை களைப்பதற்கு முன்னர் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்பதோடு, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஒரு இலட்சம் பேருக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று -23- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தது.
இதன் மூலம் நாம் எதிர்பார்த்ததை விடவும் ஜனாதிபதி கோத்தாபய நாட்டுக்கு தேவையான பல்வேறு தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
உயர் அதிகாரங்கள் அவர் வசம் காணப்படுகின்ற போதிலும் தனக்கான வரப்பிரதாசங்களை குறைத்துக் கொண்டுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார். அவரது நடவடிக்கைகளை முன்ணுதாரணமாகக் கொண்டு இளைஞர்களும் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர்.
நாட்டின் முன்னேற்றத்தில் தமது பங்கும் காணப்பட வேண்டும் என்று தற்போதைய இளைஞர்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறிருக்கையில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர். ஒரு சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்திருந்தனர். எனினும அந்நிலைமை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று நம்புகின்றோம்
(எம்.மனோசித்ரா)
Post a Comment