Header Ads



தாய் நாட்டை நேசிப்போம், அதன் இறைமையை பாதுகாப்போம் (வீடியோ இணைப்பு)

எமது தாய் நாடு 72 ஆவது சுதந்திர தினத்தை எதிர்நோக்கி இருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நாட்டின் பிரஜைகளாக நாங்கள் ஆயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றுடன் வாழ்ந்து வருகிறோம். ஏனைய இனங்களைப் போலவே சகல உரிமைகளும் எமக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனை கண்ணியப்படுத்துவது,இந்த நிஃமத்துக்கு நன்றி சொல்வது எம்மீதுள்ள கடமையாகும். 

தாய் நாட்டை நேசிப்பதும் அதன் இறைமையை பாதுகாப்பதும் இஸ்லாம் எமக்குச் சொல்லித்தரும் மிக முக்கிய பாடங்களாகும்.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாட்டிலும் வெளி நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களிலும் நடைபெற இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் பிறநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கல்வி மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக உலகின் பல்வேறு நாடுகளில் முஸ்லிம் சகோதர சகோதரிகள் வாழ்கின்றனர்.உங்களது வாழ்வை இறைவன் பொருந்திக் கொண்டு உங்களுக்கு அருள்புரிவானாக! 

இலங்கைத் தூதரகங்களில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்படுவதுண்டு.இந்த அழைப்பை எத்தனை பேர் ஏற்று அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம் என்று ஒருகனம் சிந்தியுங்கள்.

அன்பின் சகோதர சகோதரிகளே! உங்களது தாய்நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளில் இந்த நாட்டின் பிரஜை என்ற கம்பீரத்துடன்,உரிமையுடன் கலந்து கொள்ளுங்கள்.தாய்நாட்டின் மீதுள்ள பற்றையும் நேசத்தையும் வெளிப்படுத்துங்கள்.அது உங்களுக்கும்உங்கள் சந்ததிக்கும் பயன்உள்ளதாய் அமையும்.

அனைத்து சமூகங்களுடனும் ஒற்றுமையாக வாழ்ந்தது போன்று இனி வரும் காலங்களிலும் அதே ஒற்றுமையுடன் வாழ்ந்து அழகிய இலங்கையை கட்டியெழுப்ப இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.



1 comment:

  1. "இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்."

    (அல்குர்ஆன் : 39:27)

    "அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்:

    ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்;

    ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர்.

    இவர்கள் இருவரும் சமமாவார்களா?

    அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

    எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்."

    (அல்குர்ஆன் : 39:29)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.