ரணில், சஜித், கரு மூவருக்குமே உயர் பதவிகள்... தீர்வுக்கு வந்த இழுபறி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கரு ஜயசூரியவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இழுபறி நிலை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டின்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்படுகின்றனர்.
இரண்டு அமைப்புக்குமான சிரேஷ்ட தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார்.
இந்நிலையில், சஜித் பிரேமதாச அணியிலிருந்து 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்க தரப்புக்கு மாறியுள்ளதாகவும் தெரியவருகிறது.
Ranil should retaire from unp or he should gave up his position no one anymore supporting him.
ReplyDelete