ஆண் வேடமிட்டவர் குழந்தையை, பிரசவித்ததால் மாத்தறையில் பரபரப்பு
வயிற்றுவலி காரணமாக நேற்று -22- அதிகாலை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற ஆணொருவர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வைத்தியர்கள் தீர்மானித்தனர்.
இந்நிலையில் வயிற்றுவலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஆண் போல நடித்த பெண் என்பதை கண்டறிந்து அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பியதையடுத்து குறித்த நபருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
26 வயதுடைய தெவிநுவர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு ஆண் போல வேடமிட்டு வந்தவரென்றும் நீண்ட நாள் இவர் அப்பகுதியில் முச்சக்கரவண்டி சாரதியாக தொழில் செய்து வந்தவரென்றும் தெரியவந்துள்ளது.
Post a Comment