Header Ads



தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்ற, பெயரில் வகுக்கப்பட்ட சதி நடவடிக்கை எம்மால் முறியடிக்கப்பட்டுள்ளது

¨கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகள் ஓரளவு முடிவுக்கு வந்துள்ளன. கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து இருப்பார்.

அவர் தலைமையில் கட்சியைக் கொண்டு நடத்துவதே எமது தீர்மானம்.

இந்தநிலையில், ஐ.தே.கவுக்குள் இருந்துகொண்டும் வெளியில் இருந்துகொண்டும் கட்சியைத் துண்டாட யாரும் நினைத்தார்கள் என்றால் அவர்கள் முகவரியற்றுப்போவார்கள் என்பது உறுதி."

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சியைத் துண்டாட வெளியில் இருப்பவர்கள் சதித்திட்டங்களை வகுத்து வருகின்றார்கள்.

இந்தத் சதித்திட்டங்களுக்கு கட்சிக்குள் இருப்பவர்களும் துணைபோகின்றார்கள். 'தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும்' என்ற கோரிக்கையின் பெயரில் வகுக்கப்பட்ட சதி நடவடிக்கை எம்மால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருப்பவர்கள் அனைவரும் எந்தச் சதி நடவடிக்கைகளுக்கும் துணைபோகாமல் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாகும்" - என்றார்.

4 comments:

  1. கல்விக்குப் பொறுப்பான முன்னையநாள் அமைச்சர் பெரிய கள்ளன், கொமிஸ்காரன்,நாட்டு மக்களின் கோடான கோடி ரூபாக்களை செலவழித்து அவருடைய இமேஜை பாடப்புத்தகங்களில் பிரசுரித்து, தனது சுயநல அரசியல் இலாபம் தேட முற்பட்ட தேசத்துரோகி என்பதை இந்த நாட்டு மக்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாட்டின் சொத்துக்களைச் சூறையாடி கபொத உயர்தர மாணவர்களுக்கு டெப்லட் என்ற பெயரில் கோடான கோடி பணத்தைக் கமிசன் அடிக்க போட்ட திட்டத்தை அல்லாஹ் தவிடு பொடியாக்கினான். ஏனைய அத்தனை சுரண்டல்களையும் செய்துவிட்டு இப்போது ஒற்றுமை பற்றிப் பேசுகிறார்!

    ReplyDelete
  2. முன்னாள் தலைவர் உட்பட இவர்கள் அனைவரும் விலைபோன தேங்காய் மாங்காய்களைز

    SOLD OUT MANGOES

    ReplyDelete
  3. முன்னாள் தலைவர் உட்பட இவர்கள் அனைவரும் விலைபோன தேங்காய் மாங்காய்களைز

    SOLD OUT MANGOES

    ReplyDelete
  4. உங்கள் மகத்தான தலைவரின் தலைமையில் எதிர்வரும் தேர்தலில்
    குறைந்தது 50 ஆசனங்களைக்கூட உங்களால் எடுக்க முடியாது
    இனிவரும் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு நீங்கள் ஆட்சியை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது - மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.