விடுமுறைக்கு போன சீனர்கள், இலங்கை திரும்புவதை தடைசெய்ய கோரிக்கை
இலங்கையில் தொழில் புரியும் சீனர்கள் நாட்டிற்கு வருவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை -27- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,
இலங்கை அதிகளவிலான சீனர்கள் தொழில் நிமித்தம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுடைய பண்டிகை விடுமுறைக்காக அனைவரும் சீனாவிற்கு சென்றுள்ளனர்.
அவர்கள் சீனாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வரும் போது கொரோனா வைரசின் தாகத்திற்கு உள்ளாகியிருப்பார்கள் ஆயின் நாட்டிற்கு பெரும் ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தும் .
ஆகவே , இலங்கையில் தொழில் புரியும் சீனர்கள் நாட்டிற்கு வருவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
சீனாவின் கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியில் பேசும் பொருளாக மாறியுள்ளதுடன், அச்ச நிலைமையையும் தோற்றுவித்துள்ளது. அதிலிருந்து எமது நாட்டு மக்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
ஆகவே, இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சீனாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆயினும் அவர்கள் நாடு திரும்புவதற்கான விமான சீட்டிற்கான அரைவாசி சலுகையையே வழங்க தீர்மானித்துள்ளனர்.
வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களே அங்கு சென்று கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் , உடனடியாக மீண்டும் நாடு திரும்புவதற்கு ஏதுவான பணத்தை அவர்களால் திரட்ட முடியாத நிலைமை ஏற்படும். ஆகவே அவர்கள் நாடு திரும்புவதற்கான முழு பணத்தையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
Post a Comment