அரசாங்கம் சிறுபான்மை மக்களை அரவணைத்துசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும், ஹரீஸ்
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பட்டு அரசாங்கம் சிங்கள பெளத்த வாக்குகளை அதிகரித்துக்கொள்ள திட்டமிட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ், அதன் பின்னணியாகவே தனிநபர் பிரேரணைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சபையில் கூறினார்.
பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளில் 12 அரை வீதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முறையை 5 வீதாக மாற்றியமைத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். அதனால் இதனை மாற்றியமைக்கவேண்டும் என்று தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ் தனி நபர் பிரேரணையை முன் வைத்துள்ளார்.
அதேபோன்று ரத்தன தேரரும் முஸ்லிம் விவகா சட்டத்தை நீக்கவேண்டும் என தெரிவித்து தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றார்.
அரசாங்கம் இவ்வாறான வங்குரோத்து அரசியலை விட்டு சிறுபான்மை மக்களை அரவணைத்துக்கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment