சுவிஸ் விசா ஆசைக்காட்டி, பலரை ஏமாற்றிய இலங்கை பெண்
கல்வி நடவடிக்கைக்காக சுவிட்சர்லாந்து விசா பெற்றுத் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் செயற்படும் தொழில் நிறுவனம் ஒன்றின் ஊழியரே நேற்று -23- ஹொரனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப பட்ட படிப்பிற்காக சுவிட்சர்லாந்து தனியார் பல்கலைக்கழகத்தில் மேலதிக கற்கை மேற்கொள்வதற்காக விசா பெற்றுத் தருவதாக குறித்த பெண் பணம் மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஒரு இளைஞனிடம் 360,000 ரூபாவும் மற்றுமொரு இளைஞனிடம் 40,000 ரூபா பணமும் பெற்றதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு அனுப்புவதற்காக 850,000 ரூபா பணம் வழங்க வேண்டும் என குறித்த பெண் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment