சஜித் பிரேமதாஸ மொட்டு சின்னத்தில், களமிறங்குவார் என எமக்கு சந்தேகம் நிலவுகிறது - இராஜாங்க அமைச்சர் ஜானக
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தில் களமிறங்குவார் என தமக்கு சந்தேகம் நிலவுவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய பகுதியில் இன்று -26- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் சிறந்த முறையில் காணப்படுவதாக சஜித் பிரேமதாஸ கூறிகின்றார்;.
தம்மால் மாத்திரமே முடியுமென தேர்தலுக்கு முன்னர் குறிப்பிட்டார்.
தற்போது கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து சேவையாற்ற முடியுமென கூறுகின்றார்.
இதனூடாக கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளமை எமக்கு தெளிவாகின்றது.
அவருக்கு தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையும் இல்லை.
கட்சியின் சின்னமும் வழங்கப்படவில்லை.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளாரா என தமக்கு சந்தேகம் எழுவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்துள்ளார்.
Post a Comment