Header Ads



புதிய அரசாங்கம், புதிய ஜனாதிபதியினால் அனைத்தையும் செய்ய முடியாது

புதிய அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி ஆகியோர் அதிகாரத்திற்கு வருவதால் அவர்களால் அனைத்தையும் செய்ய முடியாது என்பது குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 

தெஹிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே தேரர் இதனை கூறினார். 

மக்கள் நாட்டில் இடம்பெறும் விடயங்கள் குறித்து எப்போதும் அவதானமாய் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். 

தமது வேலைத்திட்டங்கள் பயனுள்ளதாக இருந்தால் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் கூட அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் நாட்டை பள்ளத்தில் இருந்து மீட்டெடுக்க ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியம் எனவும் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.