எனக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - பாராளுமன்றில் ஹக்கீம்
”உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரர் ரில்வானை கொழும்பு வைத்தியசாலையில் நான் பார்க்க சென்றதாக வந்த செய்திகள் தவறானவை. இதனால் எனக்கு இப்போது அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சிகளால் இப்படியான செய்திகள் வெளியிடப்படுகின்றன.அரசியல் ரீதியான காரணங்களுக்காக இப்படியான கதைகளை சோடித்து மக்களை ஏமாற்றும் முயற்சி இது.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை தொடர்புபடுத்தி இப்படியான செய்திகள் வெளிவந்தன.நான் எதனையும் இரகசியமாக செய்தவனல்ல.
காத்தான்குடிக்கு நான் சென்றபோதும் முன்னர் இப்படியான செய்திகள் வெளிவந்தன.தீவிரவாதி என்று தெரியாமல் நான் சந்தித்தவர்களை வைத்து இப்படியான செய்திகள் வருகின்றன.செய்யாத குற்றத்திற்கு நான் குற்றவாளியாக தயாரில்லை.
உயிர்த்து ஞாயிறு தின தாக்குதல் நடத்தியவர்கள் எமது மதத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்றவர்கள் அல்லர்.அதனை எமது மதமோ சமூகமோ அங்கீகரிக்கவும் மாட்டாது.இப்படியான நிலையில் அபத்தமான குற்றச்சாட்டுக்களை ஏற்க நான் தயாரில்லை.சந்தேகம் இருந்தால் முழு அளவில் விசாரணை நடத்துங்கள்.அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க நான் தயார்.அதேசமயம் அரசியல் காரணங்களுக்காக யாரின் நற்பெயரையும் கெடுக்காதீர்கள் ”
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம் பியுமான ரவூப் ஹக்கீம் இன்று -23- பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
Sivarajah Ramasamy
Why don't you sue the media for publishing fake news?
ReplyDeleteMr Hakeem
ReplyDeleteYou are a lawyer and a leader of a party.
You have the right to go to the Courts.
If you are genuine why do you want to tell them better choice is Judiciary.
See Hirunika.
2000 வசந்த காலமென ஞாபகம். இரவிரவாக தோழர் தலைவர் அஸ்ரப்புடன் பேசிக்கொண்டிருந்தேன்.அதிகாலைதான் என்னை என் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மாலை நோர்வேக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். ஆனால் சற்று நேரத்தில் தோழர் அஸ்ரப் கார் அனுப்பி திரும்பவும் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மாலை என்னை விமான நிலையம் அனுப்பிவைப்பதாக கூறி அதிகாலை தோழர் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்னை மாவனல்ல அழைத்துச் சென்று காலை விருந்தின்போது தனது வலது கையென தோழர ரவூப் ஹக்கீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்க்கு கொழும்பில் முதல்நாள் தனது வீட்டில் வைத்து தோழர் பசீர் சேகு தாவுதை எனது கை வாழ் என அறிமுகம் செய்திருந்தார். தோழர் தலைஅர் அஸ்ரப் அவர்களின் வலது கையும் கைவாழும் பிரிந்தபோது என்னைவிட யாரும் அதிகமாக கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் தனிப்பட்ட ரீதியிலாவது ஒருவருக்கு ஒருவர்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் தோழர் தலைவர் அஸ்ரப்பின் விருப்பமாக இருந்திருக்க வேண்டும். ஒருபோதும் தோழர் ரவூப் ஹக்கீம் வன்முறையை ஆதரிப்பவரல்ல. ஒரு தலைவர் என்கிற முறையில் அவர் எல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புகிறவர். அவர்மீது அவதூறுகூறி அரசியல் பழிவாங்கும் முயற்ச்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது. இந்த தருணத்தில் தோழர் பசீர், அன்பர் சேகு இசத்தின், மதிப்புக்குரிய அதாவுல்லா உட்பட தோழர் அஸ்ரப்பின் வழிவந்த அனைவரும் தோழர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இளைக்கப்படும் அரசியல் பழிவாங்கலுக்கு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தர்மம் வெற்றி பெறும்.
ReplyDelete