கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையின், முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்பட தெரிவித்துள்ளது.
சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர அத தெரணவிற்கு தெரிவித்தார்.
இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2827 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 461 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொரோனா வைரஸ் 7 ஆசிய நாடுகளில் பரவியுள்ளது.
அதற்கமைய தாய்லாந்தில் 8 நோயாளர்களும், சிங்கபூரில் நால்வரும், ஜப்பானில் மூவரும், மலேசியாவில் 4 பேரும், வியட்நாமில் இருவருக்கும், தென் கொரியாவில் நால்வருக்கும் மற்றும் நேபாளத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் கம்போடியாவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று மாலை செய்தி வெளியிட்டன.
அதேபோல் அவுஸ்திரேலியாவில் ஐவருக்கும், அமெரிக்காவில் ஐவருக்கும், பிரான்சில் மூவரக்கும், கனடாவில் ஒருவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் சாங்காய் மாவட்டத்தில் 53 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு வியாபார நடடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை இரத்த செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 660 பேர் வசிக்கின்றனர்.
சீனாவின் உஹான் மாவட்டத்தில் 111 இலங்கையர்களும், கெர்ஜியாங் மற்றும் ஹூனான் ஆகிய மாகாணங்களில் 39 இலங்கையர்கள் வசிக்கின்றனர்.
அதேபோல் பீஜிங், குவான்ஜோ, செங்டு மற்றும் கேன்டன் ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியான ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எவரேனும் குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நோயாளர் காவு வண்டி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொடர்பான தெளிவுப்படுத்தல்கள் வெளியான பின்னர் சிலர் வாயை மூடும் கவசத்தை அணிந்து கொழும்புக்கு வருகைதந்துள்ளதை கணமுடிந்தது.
Post a Comment