அசாத் சாலிக்கு, கடுமையான எச்சரிக்கை
( அததெரன + ஹிரு )
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்றும் (23) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய அசாத் சாலிக்கு இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்கிழமையும் அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்தார்.
அத்துடன் தெல்தெனிய உதவி பொலிஸ் அதிகாரி ஜகத் காமினி தென்னகோனும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கவுள்ளார்.
அதேபோல் மாவனெல்ல, இடம்பிட்டிய கிராம சேவகர் யுரேக்கா திலனி ஜயரத்தவும் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த 21 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையான அசாத் சாலிக்கு ஆணைக்குழு அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.
அதன்படி ஆணைக்குழு தொடர்பில் அவதூறாக பேசுதல் மற்றும் செயற்படுதல் ஆகியவை தண்டணைக்குரிய குற்றம் என ஆணைக்குழுவின் தலைவர், நீதிபதி ஜகத் டி சில்வா அவரை எச்சரித்திருந்தார்.
Post a Comment