Header Ads



நெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்

நேற்று காலை - 25  மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு  செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு  அருகாமையில் பஸ் வண்டியை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.

அப்போது ஒரு முதிய பெண்ணொருவர் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து கொண்டு வருகின்றார் அப்போது என் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறேன் அந்த முதிய தாய் எப்படி நடந்து செல்லப் போகிறார் என்று யோசித்த வேளையில் ஒரு இளம் பெண் பிள்ளையொருவர் அந்த தாயிடம் சென்று விசாரித்து விட்டு அந்த முதிய தாயின் கையை பிடித்து கொண்டு மருதானை பள்ளிக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையை இருவரும் கடந்து செல்கிறார்கள் 

நானும் அவர்களை பின் தொடர்ந்து  செல்கிறேன் 

அந்த இளம் பெண் பிள்ளை தனது நெருங்கிய உறவுக்காரர்களைப் போலவே மிகவும் அக்கறையுடன் அழைத்து சென்றதை பார்த்த போது மிக வியப்பாக இருந்தது 

அந்த வயோதிபத்  தாயும் இளம் பெண்ணும் ஆங்கிலத்தில் உரையாடியதை அவதானித்தேன் 

நானும் அவர்கள் இருவருக்கும்  பின்னால் நின்று  அவதானித்துக் கொண்டிருக்கிறேன் அந்த வயோதிபத் தாயை   176 இலக்க பஸ்ஸில் பத்திரமாக ஏற்றி விடுகிறார் அந்த இளம் பெண் 

என் மனதிற்குள் ஒரு தீவிர உணர்வலை எப்படியாவது அந்த பெண்ணிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று

எப்படி பேசுவதுதென்று ஒரு திண்டாட்டம் 

ஒருவாறு கதைக்க ஆரம்பித்தேன் 
I appreciate your kindness
Thank you

என்று சொன்னேன்  முகம் மலர புன்னகை பூர்த்தார் 

பெயரை கேட்டேன் 

துலாதிரி என்றார் அப்போது நினைத்தேன் சிங்கள  

சகோதரி என்று பின்னர் எங்கு படித்தீர்கள் என்று கேட்டதற்கு  நுகேகொட என்கிறார் 


அந்த வயோதிபத்  தாய்  முஸ்லிம் என்றும் தமக்கும் ஒரு grand mother உள்ளதாகவும் கூறினார் 

இந்த அவசர உலகத்தில் இப்படியான மனித நேயம் நிறைந்த இளம் பெண்ணா என எண்ணிய போது மலைப்பாக இருந்தது 


சற்று நேரத்தின்    பின்னர் புறக்கோட்டை  பஸ் வந்தது   அந்த சகோதரி முன் புறமாக ஏறிக்கொண்டார் நான்  பின் புறமாக ஏறிக் கொண்டேன் 


அப்போதுதான் விளங்கியது அந்த வயோதிபத் தாய்யை பஸ்சில் ஏற்றி விட்டுத்தான் தன்னுடைய பயணத்தை கவனித்திருக்கின்றார் எனபது  புரிந்தது 

என்னதொரு  மனித நேய பண்பு 

எவ்வளவுதான்  இனவாதப்  பேச்சுக்கள் பேசிய போதும்  மனிதன் இன்னும் வாழ்கிறது சாகவில்லையென்று இதுவே  சிறந்த எடுத்துகாட்டு   

2 comments:

  1. நாம்தான் நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்

    ReplyDelete
  2. Pls get this message in English & Sinhala media, so that this could reach to the kindhearted Sr.
    If each of us can show care & kindesd to one another this world will be much better than what it is today.

    ReplyDelete

Powered by Blogger.