சஜித்திற்கு மீண்டும் பிரதிதலைவர் பதவி வழங்க ரணில் தீர்மானம் !
(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்து சஜித் பிரேமதாச விலகியிருந்தார். இவரை மீண்டும் பிரதி தலைவராக நியமிப்பதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான பதவிகள் தொடர்பிலான தெரிவுகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே சஜித் பிரேமதாசவை மீண்டும் பிரதி தலைவராக நியமிப்பதற்கும் கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் கட்சியின் மத்திய குழுவிற்கான அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க , பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனை சபையின் அனுமதியுடனேயே ரணில் விக்கிரமசிங்க செயற்குழு உறுப்பினர்களை நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment