தலைமைத்துவத்துடன் இணக்கமாக, செயற்பட சஜித்துக்கு எச்சரிக்கை
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்துடன் இணக்கமாகச் செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கடுமையாக எச்சரிக்கைசெய்யப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தன.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில், நேற்று முன்தினம் (24) நடைபெற்ற முக்கிய சந்திப்பிலேயே இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாசவைக் கடுந்தொனியில் எச்சரித்துள்ளதுடன், தலைமைத்துவ பிரச்சினையைப் பின்னர் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தற்போதைக்குப் பிரதித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு தேர்தலை வெற்றிகொள்ளும் வழிமுறைகளை ஆராயுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகப் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கி, வெற்றிபெறுவதை சிரமேற்கொண்டு செயற்படுமாறும் சபாநாயகர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாசவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எம்.ஏ.எம். நிலாம்
Post a Comment